வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Spread the love

வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகில் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், படல்கும்புர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) பிற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புஸ்ஸல்லாவ, படல்கும்புர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

விசாரணையில் இறந்தவர் பழக்கடை உரிமையாளர் என்பது தெரியவந்தது.

கடந்த 12 ஆம் திகதிக்கும் நேற்றைய (04) தினத்திற்கும் இடையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபரோ அல்லது கொலைக்கான காரணமோ இதுவரை அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கும்புர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.