வெங்காயம்

வெங்காயம்
Spread the love

வெங்காயம்

சந்தைக்கு செல்லும் வெங்காயமா – நீ
சமையல் கட்டின் அலங்காரமா
இன்றைக்கும் நாளைக்கும் நீ விருந்தா
இளம் சூடடில் வெதுங்கும் கேவலமா

உன்னை தொட்டால் அழுகை வரும்
உரிக்க உரிக்க போர்வை வரும்
பக்கம் வர மேனி நடுங்கும்
படையலிலே நீ முதல் வலம்

நீ இல்லா சமையல் ஏதுண்டோ
நீர் வடியா கண்கள் ஏதுண்டோ
வாய் சுவைக்கு முதல் நீ ரகமே
வாழ்வோடு இணைந்த முதல் மணமே

கொண்டை வைத்து நீ சிரிச்சா
கோடிகள் கோடிதேடி வரும்
உரி ஏற்றி உனை வைத்தால்
உலகோடி தேடி வரும்

பண்பாக உன்னை வளர்த்தால்
பாசத்தை என்றும் தருவாய்
தெம்பாக உறவு ஒங்க
தெவிட்டா பலம் இடுவாய் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-04-2023