வீதி விபத்துக்களில் நான்கு பேர் பலி

குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து
Spread the love

வீதி விபத்துக்களில் நான்கு பேர் பலி

நேற்று (25) இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசங்குளம் வீதியில் நேற்று பிற்பகல் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பூவரசங்குளம் வீதியில் பயணித்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 41 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், ஹொரணை – கொழும்பு வீதி, பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாலியகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதி விபத்துக்களில் நான்கு பேர் பலி

வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் பின்னால் வந்த பஸ்ஸின் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

யக்கமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மரதன்கடவல – வாழைச்சேனை வீதியில் ஹபரணை பகுதியில் இருந்து மரதன்கடவல நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னால் சென்றவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கணேவல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 65 மற்றும் 46 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மொரகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்

No posts found.