வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்

வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்
Spread the love

வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்

மொலகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மாவனல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (26) காலை விபத்துக்குள்ளானதுடன், மொலகொட பிரதேசத்தில் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது பேருந்தில் பயணிகள் இருந்ததாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தனியார் பேருந்துகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்

கண்டியில் இருந்து பாணந்துறை நோக்கி அதிகாலை 05.35 மணியளவில் புறப்பட்ட தனியார் பேருந்து மாவனெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பேருந்துடன் வேகமாக முன்னோக்கி செல்ல முற்பட்ட வேளையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, பாணந்துறை பேரூந்து முன்னோக்கிச் சென்றதுடன், சிறிது தூரம் சென்ற பின், வீதியில் சென்றவர்கள் கைகளில் தடிகளுடன் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்க முற்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த எவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்காததால், விபத்து தொடர்பில் மற்றைய பஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிஸார் தெரிவித்தன