வீட்டை தீயிக்கு இறையாக்கி தவிதவிக்கும் இளம் குடும்பத்திற்கு உதவிகள் photo

Spread the love

வீட்டை தீயிக்கு இறையாக்கி
தவிதவிக்கும் இளம் குடும்பத்திற்கு உதவிகள் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட வெதமுல்ல தோட்டம் கெமினதன் தோட்டத்தில் கடந்த

15.12.2019 ஏற்பட்ட தீ வீபத்தில் தங்களது வீட்டையும் வீட்டு பொருட்களையும் அனைத்து ஆவணங்களையும் இழந்து தவிக்கின்றது 02 பிள்ளைகளுடன் கூடிய ஒரு இளம் குடும்பம்

வீட்டை தீயிக்கு அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தாலும் வீட்டு பொருட்கள் பிள்ளைகள் ஜனவரி மாதம் பாடசாலைக்கு செல்ல வாங்கிய அனைத்து உபகரணங்களும் சில ஆவணங்களும் உடைகளும் சாப்பாட்டு பொருட்களும் முற்றாக எரிந்து விட்டது.

மனைவி தோட்டத்தில் தொழில் செய்கின்றார்; கணவர் கொழும்பில் கூலி வேலை செய்கின்றார்.

தோட்டத்தில் வீடு தராததினால் சொந்தமாக சிறுகை சேர்த்த பணத்தில் இருந்து தற்காலிகமாக கட்டிய வீடே இது. தற்போது வீடும் எரிந்து விட்டது.

தற்போது தோட்டத்தில் கைவிடப்பட்;ட வீடு ஒன்றில் தற்காலிகமாக தங்கி வருகின்றனர்;.

கணவர் ஏ.வினாயகமூர்த்தி மனைவி கே.பொண்மலர் மகன்மார்கள் வி.திலக்சன் (12) இவர் இறம்பொடை இந்து கல்லூரியில் தரம் 08 வி.விதுசன் (07) ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயத்தில் தரம் 03 கல்வி பயின்று வருகின்றனர்.

மேற்படி குறித்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு தேவையான எந்தவிதமான பொருட்கள் உடைகள் உபகரணங்கள் எதுவும் இல்லை.

இந்த குடும்பம் தங்களின் வாழ்வை கொண்டு செல்ல நல்லுல்லம் படைத்தவர்களிடம் இருந்து உதவிகளையும் தங்களுக்கான ஒரு பொருத்தமான வீட்டையும் எதிர்பார்க்கின்றனர்.

இந் நிலையில் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் பொழுது பாதிக்கப்பட்ட குடும்பம் தங்களது வீட்டை மேலும் தற்காலிகமாக அமைத்துக் கொள்ள ஒரு தொகை தகரங்களும் கையளிக்கப்பட்டன.

எது எவ்வாறாயினும் இந்த பாகிக்கப்பட்ட இளம் குடும்பத்திற்கு தற்காலிகமாக உதவுவதற்கு பலர் முன் வந்த போதும் நிரந்தரமான

வீடு ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பாதிக்கப்பட்ட இளம் குடும்பத்தினர் கோரிக்கைவிடுக்கின்றனர்.

உலகம் எல்லாம் பரவி வசிக்கும் ஈழத்து தமிழ் உறவுகளே இந்த உறவுகளுக்கு உங்களினால் முடிந்த உதவிகளை புரியுங்கள் .

இவர்கள் கண்ணீரை துடைத்து உதவிட முன் வருமாறு கையேந்தி கேட்டு கொள்கிறோம்

வீட்டை தீயிக்குக்கு
வீட்டை தீயிக்குக்கு
வீட்டை தீயிக்குக்கு

Leave a Reply