வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை

இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
Spread the love

வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை

வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை இயங்கி வருவதாகவும் குறித்த சட்டவிரோதமான மதுபானசாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) நடைபெற்று கொண்டிருக்கும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்து அங்கஜன் இராமநாதன், உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு வீடொன்றில் சட்டவிரோதமான மதுபானசாலை இயங்கி வருகின்றது.

அதாவது மதுபானசாலைக்கு செல்வோர் ‘பெல்’ அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முடியும். எனவே, அதனை தடுத்துநிறுத்துமாறு கோரினார்.

இதன்போது குறித்த பிரிவுக்கான பொலிஸ் பொறுப்பாதிகாரியினை உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு குழுத்தலைவரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.