வீடுகள் முற்றுகை இருவர் கைது

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
இதனை SHARE பண்ணுங்க

வீடுகள் முற்றுகை இருவர் கைது

மட்டக்களப்பு – புதூர் பகுதியில் இரண்டு வீடுகளில் கசிப்பு விற்பனை இடம்பெற்ற நிலையில் இன்று அதிகாலை குறித்த வீடுகள்

முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகர் மற்றும் அதன் அண்டிய பகுதிகளில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைகளை தடுப்பதற்கு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதையொழிப்பு பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறை இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் புதூர்ப்பகுதியில் இரண்டு இடங்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின்

போதையொழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டது.

இதன்போது ஒரு வீட்டிலிருந்து 40,000மில்லி லீற்றர் கசிப்பும் இன்னுமொரு வீட்டிலிருந்து 10,000 மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டதுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட கசிப்பையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்


இதனை SHARE பண்ணுங்க