விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கி

விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கி
Spread the love

விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கி


வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குரங்கு, மயில், மர அணில் போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளுக்கு 268 வாயு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.