விருந்துபசாரத்தில் உண்ட இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்

விருந்துபசாரத்தில் உண்ட இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்
Spread the love

விருந்துபசாரத்தில் உண்ட இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்

விருந்துபசாரத்தில் உணவருந்திய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையிலேயே இவ்வாறு சனிக்கிழமை (02) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருந்துபசாரத்தில் உண்ட இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்

கேகாலையில் இடம்பெற்ற வைபவமொன்றுக்கு பின்னர், அங்கு நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதன் பின்னரே திடீரென சுகயீனமடைந்துள்ளார்.

உணவு ஒவ்வாமையால் திடீரென சுகயீனமடைந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ள பொலிஸார், விருந்துபசாரத்தில் உணவு சமைத்தவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.