விபத்தில் சிக்கி 15 பேர் காயம்

பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி
Spread the love

விபத்தில் சிக்கி 15 பேர் காயம்

ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகலை – வலப்பனை வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

வலப்பனையிலுள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த குழுவினர், கெப் வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​கெப் வண்டியின் பின்புறத்தின் கதவு உடைந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கி 15 பேர் காயம்

இதன்போது கெப் வண்டியில் பயணித்தவர்கள் வீதியில் விழுந்து காயமடைந்துள்ளனர்

பின்னர் அவர்கள் வலப்பனை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கெப் வண்டியின் சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.