விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலி

விபத்தில் சிக்கி காவல்துறை மரணம்
Spread the love

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலி

நேற்று மாலை நானுஓயா ரடெல்லவில் இடம்பெற்ற விபத்தில்,
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அந்த குடும்பத்தின் உறவினரான 14 வயது சிறுவன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக்கி காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர் .

நுவரெலியா நானுஓயா வீதியில் பஸ், முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஒன்றுக்கு இடையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பஸ்ஸில் கல்விச் சுற்றுலா சென்ற கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்களே பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கர வண்டியின் சாரதியும் உயிரிழந்துள்ளனர்.

55 வயதான அப்துல் ரஹீம், 45 வயதான அவரது மனைவி ஆயிஷா பாத்திமா மற்றும் 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளே திக் ஓயாவில் இருந்து உயிரிழந்தவர்கள்.

விபத்தில் உயிரிழந்த 14 வயது சிறுவன் குடும்பத்தின் உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.