விபச்சார விடுதி முற்றுகை; ஐந்து பெண்கள் கைது|இலங்கை செய்திகள்

கொழும்பு விபச்சார விடுதியில் யாழ்பாணத்து பெண்கள்
இதனை SHARE பண்ணுங்க

விபச்சார விடுதி முற்றுகை; ஐந்து பெண்கள் கைது|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட சந்தேகநபர்கள் நேற்று (24) கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலியில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரினால் இந்த விபச்சார விடுதி நிர்வகித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெனேகம வில்லிம்புல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண், ஹோமாகம, பிடிபன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண், தெஹியத்தகண்டியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் மற்றும் தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதனை SHARE பண்ணுங்க