விஜய் தளபதி 64 படத்தில் அரசியல்

இதனை SHARE பண்ணுங்க

விஜய் தளபதி 64 படத்தில் அரசியல்

நடிகர் விஜய்-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் தளபதி 64. இதுவரை 2 கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.

மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக, தற்போது படக்குழு, கர்நாடாகாவின் ஷிமோகாவில் முகாமிட்டிருக்கிறது.

நடிகர் விஜய்யும், அவருக்கு எதிராக வில்லனாக படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கே படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய்

விஜய், ஷிமோகாவில் இருக்க, விரைவில் நடிகர் விஜய் சேதுபதி அங்கு செல்கிறார்.

கல்வி முறைக்கும், அதில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் எதிராக கருத்து மழை பொழியும் கேரக்டரில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

கல்லூரி பேராசிரியர் வேடத்தை நடிகர் விஜய் ஏற்று நடிக்கிறார். வில்லன் விஜய் சேதுபதியுடன், பேராசிரியர் விஜய் சண்டையிடுவது போன்ற காட்சிகள் உள்ளன.

அப்படிப்பட்ட காட்சிகளைத்தான், ஷிமோகாவில் படக்குழு படமாக்கவிருக்கிறது.


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply