வாழ்வோம் வா

வாழ்வோம் வா

வாழ்வோம் வா

உள்ளம் தரவா உள்ளம் தரவா
உன்னை தொழ வா
உயிரே உயிராய் உன்னை நானும்
உள்ளம் சுமக்க வா

நாளும் உன்னை தேடி
நானும் நடக்கிறேன்
நயாகரா அருவியாக
நாளும் துடிக்கிறேன்

விண்ணும் மண்ணும் மோதுதே
விளையாடல் புரியுதே
காலம் இது தான் வா வா
காதல் செய்வோம் வா வா

வெட்கம் விட்டு நீயும்
கொஞ்சம் பேசு – இந்த
வேளையில எந்தன் மனதை உரசு -இந்த
வேளையில உரசு

வாழ்வு கொஞ்ச காலம் தான்
வாழ்ந்து பார்க்கலாம் வா
இந்த வையத்தை
இன்றே ஆண்டு போகலாம் வா

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-05-2023