வாய் தவறிய வியாபாரியை நையப்புடைத்த நால்வர் கைது

வாய் தவறிய வியாபாரியை நையப்புடைத்த நால்வர் கைது
Spread the love

வாய் தவறிய வியாபாரியை நையப்புடைத்த நால்வர் கைது

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (30) குறித்த வியாபாரியின் கடைக்கு பழம் வாங்கச் சென்ற பெண்ணிடம் வியாபாரி தகாத வார்த்தை பேசினார்.

அதைக் கண்டித்தவரை கழுத்தில் கத்தியை வைத்து அவர் மிரட்டியதால் , பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

வாய் தவறிய வியாபாரியை நையப்புடைத்த நால்வர் கைது

நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரை கடத்திச் சென்றவர்கள் அவரை உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கியதுடன் அதை காணொளியாக பதிவு செய்துள்ளனர். பின்னர் படுகாயம் அடைந்த வியாபாரி அங்கிருந்து தப்பி சென்று
சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று (01) யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.