வாக்குமூலம் பெற அழைத்துவரப்பட்ட பதுளை பெண் மரணம்

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்

வாக்குமூலம் பெற அழைத்துவரப்பட்ட பதுளை பெண் மரணம்

ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண்ணொருவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்பெண்ணை அழைத்துவந்தபோது அவர் உயிரிழந்துள்ளார்.

அந்த வீட்டில் திருடினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், வீட்டின் உரிமையாளரினால் வெலிகட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட

முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது, திடீரென சுகயீனமடைந்த அப்பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னர் மரணமடைந்தார். பதுளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஆர். ​செல்வராசா குமார் (வயது 45) என்ற பெண்ணே மரணமடைந்துள்ளார். மூச்சுத்திணறல் காரணமாகவே அப்பெண் உயிரிழந்துள்ளார் என்று ​அறியமுடிகின்றது.