வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி

வவுனியாவில் காச நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றுள்ளது.

உலக காச நோய் தினமான இன்று (24.03) வவுனியா மாவட்ட வைத்தியசாலை காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றிருந்தது.

இதன்போது காச நோய் தொடர்பான கருத்தரங்கு ஒன்று காலை 9.30 மணிக்கு காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி

இதன் பின்னர் காச நோயை முடிவுக்குக் கொண்டு வர முதலிடுவோம், உயிர்களைக் காப்பாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் மக்களிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக இந்த பேரணி இடம்பெற்றிருந்தது

இப்பேரணியானது காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவிலிருந்து புதிய பேரூந்து நிலையம் ஊடாக சென்று பின்னர் ஏ9 வீதியூடாக ஹோரவப்போத்தானை வீதியினையடைந்து பஐார் வீதியூடாக வவுனியா மணிக்கூட்டுக்

கோபுரத்தினை அடைந்து மீண்டும் வைத்தியசாலையினை அடைந்திருந்தது. இப்பேரணியில் காச நோய் தொடர்பான பதாதைகளை ஏந்திய வண்ணம் குறித்த பிரிவிற்கான வைத்தியர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள், சுகாதார

பிரிவினர் , பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் 2022ம் ஆண்டு 51 காசநோயாளர்கள் இணங்காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது