வயல் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்

வயல் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு
வயல் ஒன்றில் விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (02) உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரஜனபத பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பின்னால் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வல்ஹிங்குருகெட்டிய உரகஸ்மன்ஹ பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் வீழ்ந்த இடத்திற்கு அருகாமையில் சட்டவிரோத மின் வேலி ஒன்றும் காணப்படுவதாகவும், மின் வேலியில் மோதி குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.