
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு
இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2982 ரூபாய் ஆகும்.
அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 83 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1198 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 561 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
- சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த பெண்
- கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்
- விபத்தில் பெண் மற்றும் இளைஞன் பலி
- பெண் ஒருவரை கடத்திய இருவர் கைது
- சீன கப்பலுக்கு அனுமதியில்லை
- புலிகளின் ஆயுதங்கள், தங்க நகைகளை தேடி அகழ்வு
- இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
- யாழில் வாளுடன் வாலிபன் கைது
- புல்மோட்டையில் பிக்கு அராஜகம்
- நான் அவரின் காலில் விழவில்லை பொன்சேகா