தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019
தமிழர் ஒருங்கிணைப்பு குழு – லண்டன் எக்ஸல்
கார்த்திகை மாதத்தில் கரிய இருள் சூழ்ந்த காலப்பகுதியில் எம்வாழ்வில் ஒளியாகவும் உயிராகவும் உள்ள காவிய
நாயகர்களுக்காக கனத்த மனதுடன் உணர்வோடு எழுச்சி கொண்டு அவர்கள் விதைத்த கல்லறை மேல் மீண்டும் ஒரு
முறை சத்தியம் செய்து வல்லமை தாருங்கள் என வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள்.
வழமை போன்று பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2019ஆம் ஆண்டிற்க்கான
தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்படுகின்றது.
நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை புலம் பெயர் நாடுகளில் தாயகம் நோக்கிய பணிகளில் நீண்ட காலமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு மார்க்கண்டு
இரவிசங்கர் அவர்கள் ஏற்றி வைத்தார். பிரித்தானிய தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பைச் சார்ந்த செல்வி அஸ்வினி ஆனந்த் ஏற்றி
வைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை 1995ம் ஆண்டு யாழ்க் கோட்டையில் சிறிலங்கா படையினருடன் மோதலின் போது வீரச்சாவெய்திய கீர்த்தியின் சகோரனும்
தேசியத்தலைவரின் பாரட்டினைப் பெற்ற மருத்துவப் போராளியும் 2009 இறுதியுத்தம் வரை பல நூறு
போராளிகளுக்கு களத்தில் நின்று மருத்துவப் பணியைப் புரிந்தவருமான Philip Johnson அவர்கள் ஏற்றி வைத்தார்.