ரஷ்யா கூலி படை புரட்சி முடிவுக்கு வந்தது

ரஷ்யா கூலி படை புரட்சி முடிவுக்கு வந்தது
Spread the love

ரஷ்யா கூலி படை புரட்சி முடிவுக்கு வந்தது

ரஷ்ய வாடகை இராணுவமான வாக்னர் கூலிப்படையினர் ,
தெற்கு ரஷ்யா நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானில் இருந்து
சனிக்கிழமை இரவு வெளியேறத் தொடங்கினர்.

பெலாரஸ் ஜனாதிபதி ஒரு ஒப்பந்தம் செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து,
இரத்தக்களரியை தவிர்ப்பதற்காக தனது படைகள் ,
தளத்திற்குத் திரும்பும் என்று வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்தார்

பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் அலுவலகம்,
புட்டினின் வழங்கிய ஒப்புதலுடன் ப்ரிகோஜினுடன் பேசியதாகவும்,
வாக்னர் போராளிகளின் தலைவர் நிலைமையைத் தணிக்க
ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார் .

ரஷ்யா கூலி படை புரட்சி முடிவுக்கு வந்தது

ரஷ்யா பாதுகாப்பு அமைச்ச்சு வாக்னர் இராணுவ நிறுவனத்தை,
கலைக்க விரும்பினர். அதனாலயே நாங்கள் இந்த கலகத்தில் ஈடுபட்டோம்
என வாக்காளர் குழு தலைவர் தெரிவித்துள்ளார் .

ரஸ்யாவுடன் முரண்பட்ட நிலையில் ,வாக்னர் குழுவுக்கான விநியோகங்கள் ,
மற்றும் நடைமுறை நகர்வுகள் யாவும் முடக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

வாக்னர் குழு ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேற்றிய பின்னர் ,தாக்குதலை நடத்த,அல்லது வாக்னர் குழு முக்கிய தளபதிகளை தம்வச படுத்த ,ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள கூடும் என
எதிர் பார்க்க படுகிறது .