ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்

ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்
Spread the love

ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்

உலக செய்திகள் |ரஷ்யா இராணுவம் உக்கிரைன் கிழக்கு பகுதியை
ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாரிய இராணுவ
நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது .

குறித்த பகுதிகளை நோக்கி மூன்று முனை ஊடாக,
83 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது .

குழுக்களாக பிரிந்து செறிந்து தாக்குதலை தொடுத்து வருவதால்,
அதனை உக்கிரைன் இராணுவத்தினரால் ,எதிர்கொள்ளல் முடியாத நிலையில் ,
தமது முன்னணி படைகளை பாதுகாக்கும் நோக்குடன் ,
அங்கிருந்த ,அந்த படை பிரிவு ஒன்று முற்றாக விலக்க பட்டுள்ளது .

ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்

ரஷ்ய இராணுவம் மீட் பு நடவடிக்கை மேற்கொள்ள முனைகிறது என்பதற்கு பதிலாக ,தாம் விலகும் நிலையில் ,ரஷ்ய படைகள் ஆக்கிரமித்தன என்ற தொனியில் ,உக்கிரைன் படைகள் பேசி வருகின்றனர் .

விளங்கும் பாஷையில் சொல்வது என்றால் விழுந்தும் ,
மீசையில் மண் ஒட்டாத கதையாக தோல்வியை ஏற்று கொள்ள முடியாத
நிலையில் படை விலகல் என கூறுகிறது .

பிந்தி வரும் சுயாதீன தகவல் ஒன்று பக்மூட் ரஷ்ய படைகள் வசம்,
வீழ்ந்து விட்டது என்கிறது .

எனினும் உக்கிரைன் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது .
மூர்க்கத்தனமான சண்டைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

150 ரஷ்ய வீரர்கள் பலியாகியும் 250 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் .
மூவர் உயிரோடு சிறை பிடிக்க பட்டுள்ளதாக உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .