ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்

கடந்த தினம் ரஷ்யா துருப்புக்கள் ,உக்ரைன் கிழக்கு லைமன், பாக்முட்,
அவ்திவ்கா மற்றும் மரிங்கா முனைகளில் ,கடும் தாக்குதலைத் தொடர்ந்தன;
குறிப்பாக, பக்முட் நகரை முழுக் கட்டுப் பாட்டிற்குள்
கொண்டு வர ,பாரிய படை நகர்வை மேற்கொண்டன

ரஷ்யப் படைகள் 2 ஏவுகணை மற்றும் 34 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது,பல ஏவுகணை அமைப்புகளிலிருந்து 36 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியது.


உக்ரைன் முழுவதும் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை அதிகமாக நடத்தியது ,லைமன், பாக்முட், அவ்திவ்கா மற்றும் மரின்கா முனைகளில் பலமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன . 35க்கும் மேற்பட்ட ரஷ்ய தாக்குதல்கள் முறியடிக்கப் பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

தொடர்ந்து பக்மூட் பகுதியை முழுவதுமாக தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் தாக்குதல்களை ரஷ்ய வாடகை இராணுவம் மேற்கொண்டு வருகிறது .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்


வரும் மணித்தியாலங்கள் அல்லது நாட்களில் ,பக்மூட் ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது .

மேலும் உக்ரைன் போலந்திடம் 200 ரோசோமாக் கவச வண்டிகளை
வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது, அதில் 100 இப்போதும் 100 பிறகும்
வழங்கப்படும் என போலந்து தெரிந்துள்ளது .


ரஸ்யாவை வெற்றி கொள்ள முப்பது நாடுகளிடம் இருந்து உக்ரைன்
ஆயுதங்களை வாங்கி குவித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது