ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்

ரயில் மோதி வாலிபன் மரணம்
Spread the love

ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்

ரயில் எஞ்சின் மற்றும் இயந்திரத் தொகுதிகளுக்கான தட்டுப்பாடு காரணமாக வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்த ரயில் சேவைகளுக்காக 74 எஞ்சின்களும் 193 இயந்திரத் தொகுதிகளும் தேவைப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பயணிப்பதற்கு ஏற்ற வகையில் 58 எஞ்சின்களும் 162 இயந்திரத் தொகுதிகளுமே தற்போது உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது