
யாரிடமும் சொல்லிடாதே
உழுது புரட்டி வயலில
உழவடிக்க வர வா
உரமிட்டு பயிர் எழவே
உயிர் கொடுத்து விட வா
கால நேரம் நீரிறைத்து
கவனித்து விட வா
களை பிடுங்கி கதிர் எழவே
கனியாக்கி தர வா
மண்டையில மிதி மிதித்து
மணி பிடுங்கி தர வா
மாளிகையில் வாய் சுவைக்க
மணி அரசி தர வா
உயிர் பிடிக்க நான் உழுது
உரம் இட்டேன் பாராய்
உயிர் உள்ளவரை நீயிந்த
உண்மை என்றும் மறவாய் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-05-2023