யானையுடன் கொழும்பில் போராட்டம்

யானையுடன் கொழும்பில் போராட்டம்
Spread the love

யானையுடன் கொழும்பில் போராட்டம்

யானை மனித மோதலைத் தீர்ப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி பல சிவில் அமைப்புக்கள் மற்றும்

சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை புதன்கிழமை (18) காலை நடத்தியது.

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏறக்குறைய 300 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யானைகளுக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு எனவும் யானைகள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்

எனவும் இல்லையெனில் யானைகள் எதிர்காலத்தில் புகைப்படங்களில் மட்டுமே காணப்படுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட குழு சுட்டிக்காட்டியுள்ளது.

யானையுடன் கொழும்பில் போராட்டம்

யானைகள் – மனித மோதலினால் ஹக்க பட்டாசுகளினால் 651 மரணங்கள் பதிவாகி உள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியது.மேலும், யானைக் காணிகளை

பாதுகாக்குமாறும், யானை வழித்தடங்களைத் தடுக்க வேண்டாம் என்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளை பிரதிநிதிகள் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறிய யானையொன்றையும் நிர்மாணித்து,
போட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ