மொறு மொறு காலிஃபிளவர் சில்லி இப்படி செய்து அசத்துங்க

மொறு மொறு காலிஃபிளவர் சில்லி இப்படி செய்து அசத்துங்க
Spread the love

மொறு மொறு காலிஃபிளவர் சில்லி இப்படி செய்து அசத்துங்க

மொறு மொறு காலிஃபிளவர் சில்லி வீட்டில இப்படி செய்து அசத்துங்க .மிகவும் இலகுவான முறையில் கொட்டல் சுவையில் இப்படி செய்து பாருங்க .

காலிஃபிளவர் சில்லி செய்வது எப்படி ..?

இப்போ காலிஃபிளவர் சில்லி செய்வது எப்படி என்கின்ற உங்கள் கேள்விக்கு ,இதோ இதில் செய்முறை விளக்கத்துடன் பதில் உள்ளது .

காலிஃபிளவர் சில்லி இனி இப்படித்தான் செய்வீங்க .காலிஃபிளவர் சில்லி செய்முறைக்குள் போகலாம் வாங்க .

காலிஃபிளவர் சில்லி செய்முறை ஒன்று .

இந்த காலிஃபிளவர் சில்லி செய்வதற்கு 250 கிராம் காலிஃபிளவர் எடுத்து கொள்ளுங்க .

அதனை கொஞ்சம் சின்னத்தாக வெட்டி தண்ணீரில் போட்டு கழுவி கொள்ளுங்க .அதன் பின்னர் நீர் சேர்த்திடுங்க .கூடவே அரை கரண்டி மஞ்சள் ,கொஞ்சமா உப்புச சேர்த்து கலக்கி விடுங்க .

இப்போ இதை அடுப்பில வைத்து நன்றாக கொதிக்க வைத்து ,நல்ல கொதி வந்ததும் அடுப்பை அணைத்து கொள்ளுங்க .

இப்போ காலிஃபிளவர வடி கட்டி எடுத்திருங்க .

அதன் பின்னர் ஒரு சட்டியில் அரை கப் அளவு மைதா மா ,அரை கப் சோளம் மா ,சில்லி பவுடர் ,மல்லி தூள் ,கரம் மசாலா , தேவையான உப்பு ,மஞ்சள்தூள் ,தக்காளி சோஸ் .சில்லி சோஸ்,சோயா சோஸ் ,எல்லாம் போட்டு மாவை நன்றாக பிசைந்து குழைத்திடுங்க .

தோசை மாவு பதத்திற்கு கரைத்து எடுத்து ,அதற்குள்ள ரெடியாக அவித்து வைத்த காலிஃபிளவர போட்டு கலக்கி கொள்ளுங்க .ஐந்து நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்க .

காலிஃபிளவர் சில்லி செய்முறை இரண்டு

இப்போ அடுப்பில கடாய வைத்து ,காலிஃபிளவர் சில்லி பொரித்திட தேவையான எண்ணெய் விட்டு சூடாக்கி கொள்ளுங்க .

இப்போ செஞ்சி வைத்துள்ள காலிஃபிளவர ஒன்று ஒன்றாக எண்ணெய்யில போட்டு நன்றாக பொரித்து எடுத்திருங்க .

இறுதியாக ஒரு கொத்து கருவேப்பிலை பொரித்து எடுத்து .அதனை பொரித்து வைத்துள்ள காலிஃபிளவர் சில்லி மேல போட்டு எடுத்து சாப்பிடுங்க .

இப்படித்தாங்க காலிஃபிளவர் சில்லி செய்து கொள்வது .இது போலவே வீட்டில் இப்படி செய்து அசத்துங்க மக்களே .

Leave a Reply