மூன்று விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு

நடந்து சென்ற பெண்ணை இடித்து கொன்ற ஆசாமி
Spread the love

மூன்று விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு

புத்தளம், பிட்டிகல, கிண்ணியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பெண், சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

கிண்ணியா பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கல்வெட்டில் மோதியதில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த சிறுமி, தந்தை, தாய் மற்றும் மற்றுமொரு குழந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், சாரதியான தந்தை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு

இதேவேளை, புத்தளம் வீதியில் இடது பக்கத்திலிருந்து வீதியின் வலது பக்கமாகத் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 48 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பிட்டிகல பிரதேசத்தில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் கீழே இறங்கிய போது, அதே பஸ்ஸின் பின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அமுகொட பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்