மூன்று மாதத்தில் – கோத்தாவுக்கு ஆபத்து
இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள தமிழின கொலையாளியும் இலங்கை கிட்லருமான கோட்டபாய தொடர்ந்து முடி சூடா மன்னனாக நாட்டில் விளங்கிடவும் நேரிய முறையில் ஆட்சியை கொண்டு நடத்தவும் தனது பாராளுமன்ற ஆசனங்களை தக்க வைத்து கொள்ள வேண்டிய நிலையில் தள்ள பட்டுளளார் ,
அதற்கு அமைவாக சித்திரை மாதம் நிறைவடையும் முன்னர் பாரளுமன்ற தேர்தலை நடத்திட வேண்டிய சூழல் உள்ளார் , இதில் யானை கட்சியினர் பலத்த வெற்றியை பெற்றுக்கொண்டால் தொங்கு பால ஆட்சி ஒன்றே அமையும் நிலை உருவாகும் நிலை ஏற்படும் ,
தன்னை கூட இருந்து படுதோல்விக்கு தள்ளியது ரணில் என நம்பும் சஜித் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து அதன் ஊடக தேர்தலில் குதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் சூழல் ரணிலை தாம் பாரளுமன்ற தேர்தலிலும் நம்பிட தயாரில்லை என்பதை கோடிட்டு காட்டுகிறது
.இந்த வெற்றியை உறுதி படுத்த கோட்டபாய பாரளுமன்ற தேர்தலில் அதிக ஆசனத்தை தனித்து கூட்டணி இன்றி ஆட்சியமைக்கும் நிலைக்கு முன்னேறிட வேண்டும் ,அது தவறின் அது பெரும் இன்னலுக்கும் மீள் ஒரு தேர்தலை நடத்தும் நிலைக்கு செல்ல கூடும் .
எனவே இதில் இருந்து தப்பிட அணைத்து மக்களையும் குஷி படுத்த வேண்டிய நிலையில் உளளார் ,அதற்குள்ளாக நூறு நாள் வேலைத்திட்டத்தின் வாயிலாக மக்களை குஷி படுத்தும் நிலையில் ஈடுபடுவார் ,
அதன் பின்னரே தனது இனவாத செயல் பாடுகளை தீவிர படுத்துவார் என அடித்து கூறலாம் ,அவரு தவறின் இன்று முதலே இனவாத அதிகாரத்தில் மிதப்பார் எனின் அது சிங்கள மக்களை முற்றாக நம்பிய செயலாகவே அமையும் ,அதனை வரும் பாராளுமன்ற தேர்தல் தெளிவு படுத்தும் என்பதே கள நிலவரமாக விரிந்து கிடக்கிறது – வன்னி மைந்தன் –