முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு
Spread the love

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் இன்று (18) இடம்பெறும் 14 ஆவது ஆண்டு நினைவேந்தலில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் தமது வீடுகளில் சுடர் ஏற்றி அஞ்சலிக்குமாறும் ஒருவேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகளில் பரிமாறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றவுள்ளதோடு ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.