முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதிரணில்

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Spread the love

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், நடமாடும் சேவை ஒன்று, ஜூலை மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவைக்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்