முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபத்தில் படுகாயம்

Spread the love

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபத்தில் படுகாயம்

விபத்தில் காயமடைந்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வேன், புத்தளம் – முந்தல் 107 ஆம் கட்டை பகுதியில் மரமொன்றில் மோதி இன்று(29) காலை விபத்திற்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் வேனில் பயணித்த மேலும் மூவர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விஜயகலா மகேஸ்வரனின் உறவினர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபத்தில் படுகாயம்

விபத்து தொடர்பில் சிலாபம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Author: நலன் விரும்பி