
முதலை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி
முதலை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பயின்றாற்றின் ஓரத்தில் நேற்று (22) மாலை கீரை வள்ளல் மற்றும் பொன்னாங்கண்ணி இலைக்கறி ஆகியவற்றை பறித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிர் இழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்மாந்துறை கோரக் கோயில் பிரதேசத்தை சேர்ந்த 04 பிள்ளைகளின் தந்தையாகிய இராசாப்பு சௌந்தராஜன் (வயது -62) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் இன்று மதியம் கையளிக்கப்பட்டுள்ளது.