முதலையிடம் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய பிக்கு| இலங்கை செய்திகள்

யாழில் சிக்கியய பெரிய முதலை

முதலையிடம் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய பிக்கு| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பேருவளை பிரதேசத்திலிருந்து கதிர்காமத்துக்கு யாத்திரைச் சென்ற பிக்கு ஒருவர், முதலையிடம் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (17) பதிவாகியுள்ளது.

குறித்த பிக்கு 17ஆம் திகதி இரவு 7 மணியளவில் மாணிக்கக்கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த

முதலையொன்று பிக்குவின் முதுகை தாக்கியுள்ளது. இதன்போது பிக்கு முதலையிடமிருந்து தப்புவதற்காக முயற்சித்த போது அது பிக்குவின்

கையையும் கடித்து காயப்படுத்தியதையடுத்து, பிக்கு உடனடியாக மாணிக்கக் கங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்

இதனையடுத்து அருகிலிருந்தவர்களால் பிக்கு உடனடியாக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.