முதலிரவு ..!

Spread the love

முதலிரவு ..!

அடியே உன்னை அணைக்கவா …?
அவசரம் பிடிக்கவா ..?
தேடி என்னை வந்தவளே
தேடி வா கூடிடவே ….

வெட்கம் என்ன மானே
அச்சம் விடு தேனே …
உச்சம் தொடு நீயே
உள்ளம் தா மானே …..

பட்ட பகல் இரவு
பள்ளியறை தழுவு …
பூட்டி வைத்த ஆசைகளை
பூட்டுடைத்து கழுவு …

நீயும் நானும் இன்று
சேர்ந்த திரு நாளு ….
திருமணமா நறுமணமா
திருவிழா கோலமா …?

இந்த நாள் ஒன்றுக்கு
இத்தனை தவமா ..?
இது தான் வாழ்வின்
இல்லற வரமா …?

சில்லறை சிரிப்பில்
சினுங்கும் முனகலு ..
காதில் ஒலிக்குதே
கையாள துடிக்குதே ….

போதும் என்ற வார்த்தை
போதவில்லை இங்கே …
ஆசை அடங்கி நூற
அரும்புதே பாசம் ….

இறைவன் படைப்பில் ஒன்று
இது தானே நன்று ….
அகிலம் வாழுதே நன்று
அதை நம்பி தானே இன்று …..!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -15/08/2019

முதலிரவு ..

      Leave a Reply