முடியாது என்றால் மறந்து விடு
விடியாத காலை ஒன்றில்
விழியோரம் நீயும் வந்து …
ஏதோ செய்கின்றாய் – நெஞ்சே
ஏதோ சொல்கின்றாய் …..
மழை போல நினைவு துள்ள
மனதோடு என்னை அள்ள….
விளையாடும் பூவே நீயோ – நெஞ்சில்
விதையாக முளைத்தாய் ….
அசைந்தாடும் காற்றே ஆகி
அன்றாடம் தேகம் தழுவி ….
விளையாடும் வெள்ளி நிலவே
விவாகம் என்றோ சொல்லு …?
முடியாத காதல் ஒன்றாய்
முளையோடு கருகும் என்றால் ….
விழியோடு நீயும் வேண்டாம்
விரைவாக சென்று விடு ….
விழியோடு நீரை சுமந்து – காற்று
விளையாடும் சருகே ஆகி …..
நடை போடும் சாலையாகி
நானோடி வாழ வேண்டாம் ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -31/08/2017
வன்னி மைந்தன் கவிதைகள்