மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ச | இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .

மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ச | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆளுங்கட்சி நண்பர்கள் ஆதரவு கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண குறிப்பிடுகின்றார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும். பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண முடியாது.

இந்த முயற்சியை நாங்கள் ஆதரிக்கவில்லை. மஹிந்த ராஜபக்ச இப்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும்.
அவர் நாட்டுக்காக ஏதாவது செய்திருந்தால் அது அந்த நற்பெயரைக் காக்க காரணமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.