மஹிந்த அணி தனித்துப்போட்டி

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Spread the love

மஹிந்த அணி தனித்துப்போட்டி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது வேறு எந்தக் கட்சியின் சின்னத்திலோ களமிறங்கப்போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பதவி நீக்கப்பட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான 9 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரும் இதற்கு இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்து நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 09 பேரும்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வகித்த பதவிகளிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டனர்.

No posts found.