மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்

மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்
Spread the love

மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரூவான்எலிய பிரதேசத்தில் தொடர்ச்சியான மழையினால் வீடொன்றின் 15 அடி உயரம் கொண்ட பாதுகாப்பு கல்சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு அறைகள் மற்றும் மலசலகூடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மழையால் சுவர் இடிந்து விழுந்து சேதம்

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மழையுடனான வானிலை காரணமாக நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது