
மர்ம சடலம் மீட்பு மிரட்டும் கொலைகள்
நானுஓயா, கிரிமெட்டிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா, கிளாரென்டர் தோட்டத்தை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீதியொன்றில் உள்ள படிக்கட்டில் சடலம் ஒன்று காணப்படுவதாக நானுஓயா பொலிஸாருக்கு நேற்று (09) தகவல் கிடைத்திருந்தது.
உயிரிழந்தவர் கடந்த 8ஆம் திகதி உறவினர் வீட்டில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.