மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் கோர விபத்து

https://www.ethiri.com/?s=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+
Spread the love

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் கோர விபத்து

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் பயணித்த இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து நேற்று (21) மாலை மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் தலைமன்னார் பொலிஸ் பிரிவான பருத்திப் பண்ணையில் இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,

தலை மன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தையின் தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே விபத்துக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் கோர விபத்து

உயிரிழந்த மனோகரன் நிசாந்தன் பேசாலையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தனது கிராமமான தலைமன்னார் ஊர் மனைக்கு பயணித்துக் கொண்டிருந்த போது, வெளி மாவட்டத்திலிருந்து சுற்றுலா வந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றுடன் மோதி இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இறந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடற் கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும் விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதுண்ட வாகனம் தலைமன்னார் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்