மனைவியை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவன்

இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
இதனை SHARE பண்ணுங்க

மனைவியை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவன்

பொரளை, சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (13) இரவு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மனைவியை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவன்

கொலையை செய்த நபர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான நீதவான் மரண விசாரணை இன்று (14)
நடைபெறவுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதனை SHARE பண்ணுங்க