மனித கடத்தல்காரர்கள் மன்னாரில் கைது

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Spread the love

மனித கடத்தல்காரர்கள் மன்னாரில் கைது

தலைமன்னார் மணல் குன்றுகள் 3 இல் ஒக்டோபர் 21 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நால்வரை கைது செய்துள்ளனர். அத்துடன் 02 டிங்கி படகுகளையும் கைப்பற்றினர்.

கடல் வழிகள் ஊடாக இடம்பெறும் பரந்தளவிலான சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் தீவின் கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

மனித கடத்தல்காரர்கள் மன்னாரில் கைது

இந்த முயற்சிகளின் விரிவாக்கமாக, SLNS தம்மன்னா மற்றும் SLNS கஜபா ஆகியன கடலோர ரோந்துக் கப்பல்களை மணல் குன்றுகள் 3 இல் நிலைநிறுத்தி இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

டிங்கி படகுகளில் சந்தேகத்தின் பேரில் பயணித்த 04 பேர் செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி அப்பகுதியில் தங்கியிருந்ததாலும், வெளிநாட்டில்

இருந்து இலங்கைக்கு மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாலும், அவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் பேசாலை பிரதேசத்தை சேர்ந்த 28 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக டிங்கி படகுகளுடன் சந்தேகநபர்கள், தலைமன்னார் பொலிஸார் மற்றும் மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.