மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்ட விமானங்கள்

மத்தள விமான நிலைய

மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு கட்டுநாயக்க பிரதேசத்தில் கடும் மழை பெய்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்ட விமானங்கள்

அதன்படி, முதல் விமானம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து 15 விமான ஊழியர்களுடன் வந்துள்ள நிலையில் நேற்றிரவு 11.35 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கபபட்டுள்ளது.

விமானத்தில் உள்ள பயணிகளும் ஊழியர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பஸ் மூலம் அழைத்து வரப்படுவதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், மாலைத்தீவின் மாலேயில் இருந்து வந்த விமானம் ஒன்றும் இன்று அதிகாலை​ 12.02 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.