மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
வீடொன்றுக்கான மதிலை கட்டுவதற்கு அத்திபாரம் வெட்டிக்கொண்டிருந்த போது மண்மேடு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி ஷொருகசின்ன பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விமல் ஜயசிறி (62) என்பவரே மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
உயிரிழந்தவர் கூலித் தொழிலாளி என்றும், (02) நாவலப்பிட்டி உயர் நீர்ப் பகுதியில் வீடொன்றுக்கு மதிலை கட்டுவதற்கு அத்திபாரம் வெட்டிக் கொண்டிருந்த போது, மோசமான காலநிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
மண்மேட்டின் கீழ் விழுந்த நபரை பிரதேசவாசிகள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.