மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ
Spread the love

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வாழ்வில் திருமணம் என்ற உறவு மிக முக்கியமானது. ஆண், பெண் உறவின் எல்லைக்கோடு திருமணம் என்ற புள்ளியின் மூலம் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு திருமண முறைகள் இருந்தாலும் அவரவர் கலாசார முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது.

சைவ, அசைவ விருந்து, பாட்டுக் கச்சேரி என நகர் புறங்களில் நடைபெறும் திருமண விழாக்களுக்கு எடுக்கப்படும் போட்டோ, வீடியோக்கள் தற்போது பெரும் பாய்ச்சலாக வேறு திசையை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. அது சமூகத்தில் பெரும் அதிர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது.

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ

மணமகனுக்கு மது ஊற்றிக் கொடுக்கும் மணமகள், செயற்கை மழையை பெய்ய வைத்து அதில் மணமக்கள் முழுமையாக நனைய வைத்து புகைப்படம்,

வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஃப்ரீ வெட்டிங் ஷூட் என அழைக்கப்படும் இப்படியான புகைப்படங்கள், வீடியோக்கள் உயரமான மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை சூழல் நிறைந்த வனப்பகுதிகளில் எடுக்கப்படுகின்றன. ஆபத்தான முறையில் கடலிலும் இப்படியான ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

கேரளாவில் சமீபத்தில் அரைகுறை ஆடைகளுடன் மணமகள் மற்றும் மணமகன் ஆகிய இருவரும் திருமணத்துக்கு முன்பு பங்கேற்ற ஃப்ரீ வெட்டிங் ஷூட் புகைப்படம் எடுக்கப்பட்டது. இப்புகைப்படங்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தின.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமகனின் வாயோட வாய் வச்சு சிகரெட் புகையை மணமகள் உறிஞ்சும் அந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் பலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.