மட்டக்களப்பு சிறையில் இருந்து 14 பேர் விடுதலை

மட்டக்களப்பு சிறையில் இருந்து 14 பேர் விடுதலை

மட்டக்களப்பு சிறையில் இருந்து 14 பேர் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் வெசாக் பௌர்ணமி தினத்தையிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 14 ஆண் கைதிகள் நேற்று (05) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் பௌர்ணமி தினத்தில் வருடாவருடம் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுவரும் நிலையில், இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 988 கைதிகளை விடுதலை செய்யும் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகள் 14 பேரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்துள்ளனர்