போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Spread the love

போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு

பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனமொன்றை நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (05) புதுக்கடை இலக்கம் 03 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு

போலி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய கிரியுல்ல, நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பம்பலப்பிட்டி லொரிஸ்

வீதி பகுதியில் அமைந்துள்ள குறித்த கல்வி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ