
போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
போலந்து அரசுக்கு சொந்தமான PLL LOT விமான நிறுவனம்,
வார்சாவின் சோபின் விமான நிலையத்தில் தரை இறங்கும் பொழுது ,
ஆளில்லா விமானம் அருகே பறந்ததல் பர பரப்பு ஏற்பட்டது
சனிக்கிழமையன்று தரையிறங்கும் அணுகுமுறையை மேற்கொண்டபோது,
விமானத்தில் இருந்து 30 மீட்டர் (98 அடி) தொலைவில்
ஆளில்லா விமானம் பறந்து மிரட்டி சென்றுள்ளது .
போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
விமான பயண வழித்தடத்தில் இவ்விதமான விமானங்கள்
பறப்பது மிக ஆபத்தான ஒன்றாகும் ,
அந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில்,
அரச விமான நிறுவனம் மற்றும் ,இராணுவ
வான்படையினர் ஆராய்ந்து வருகின்றனர் .
குறித்த விமானம் மோதி இருந்தால் ,அந்த விமானத்தில் பயணித்த அணைத்து
பயணிகளும் பலியாகி இருப்பார்கள் ,ஆனால் தெய்வாதீனமாக
யாவரும் தப்பித்து கொண்டனர் .
மேற்படி சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறு அருகில் பறந்து மிரட்டி சென்றது ,ரஷ்ய விமானமாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .