போதையில் மோதல் ஒருவர் மரணம்

போதையில் மோதல் ஒருவர் மரணம்
Spread the love

போதையில் மோதல் ஒருவர் மரணம்

ஜா எல உதம்விட்ட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜா எல பொலிஸார் தெரிவித்தனர்.

ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்பலிய குருசாவல வீதியைச் சேர்ந்த தனுக சம்பத் சில்வா (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு குழுவினரும் விடுதி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் குறித்த நபர் கடுமையான

போதையில் மோதல் ஒருவர் மரணம்

தாக்குதலுக்குள்ளாகி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம்

தொடர்பில் ஜா எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ